அக்கரைப்பற்று கவடாப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் இரத்த தாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி


அக்கரைப்பற்று கவடாப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை (11) குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபர் ஒருவரால் இச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

40 வயது மதிக்க தக்க பெண் தனது உறவினரின் வீட்டில் இருந்த வேளை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதன் பின்னன் குறித்த பெண் இரத்த காயங்களுடன் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments: