ஆலைடியவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவினால் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று (11) அக்கரைப்பற்று மஹாசக்தி கலாச்சார மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.
ஆலைடியவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஜரூபினா, மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்பிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்களது கலை,கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது இதன் போது மகளீர் சங்க தலைவிகளும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments: