திருக்கோவில் பிரதேசத்தில் அத்தம தூய்மை வேலைத்திட்டம் இடம் பெற்றது

"தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ்  உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளிலும் நேற்றைய தினம் 31.10.2026 சனிக்கிழமை காலை இடம் பெற்றது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. தங்கைய கஜேந்திரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக குறித்த நிகழ்வானது இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார், பிரஜாசக்தி  தவிசாளர்கள் சுற்றாடல் கழக மாணவர்கள், இளைஞர் கழகப் பிரதிநிதிகள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அரசின் தூய்மைப்படுத்தல் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.










No comments: