ஆலையடிவேம்பு MOH பகுதியில் நாளை முதல் உலக நீர் வெறுப்பு தின விழிப்புணர்வு ஆரம்பம்

செப்டம்பர்  (28) உலக நீர் வெறுப்பு தினத்தினை முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் அரச சுகாதார சேவைகள் நிலையங்கள் ஊடக பல விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் பணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கை அமைய பல பகுதிகளில் நீர் வெறுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

 நாளை முதல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன் போது செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் வேலைத்திட்டமும் (Mobile ) ( பனங்காடு , கன்னகிபுரம் , கவடாப்பிட்டி, அளிக்கம்பை ) போன்ற பகுதிகளில் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.No comments: