பனை உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம் பெற்றது.

யதுர்சன்

பனை உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

திருக்கோவில் செயலகப்பிரிவில் அதிகளவில் காணப்படும் பனை சார்ந்த வளங்களை அடிப்படையாகக்கொண்டும், சிறந்த பனை உற்பத்திகளை எமது பிரதேசத்தில் உருவாக்குதல் மற்றும் வேறு பிரதேசங்களுக்கு வினியோகித்தல் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைளை மேற்காள்ளுதல் என்பனவற்றை நோக்கமாகக்கொண்டு பயனுறுதிமிக்க சிறந்ததொரு திட்டத்தை உருவாக்கல் தொடர்பில் மேற்படி கலந்துரையாடல்  பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலமையில் இடம் பெற்றது.

இதன் போது திருக்கோவில் செயலகப்பிரிவில் பனைசார்ந்த உற்பத்தி பயிற்சிகளை பெற்றவர்கள் மற்றும் அர்வமுள்ள தொழில் முனைவோர் ஆகியோரை உள்ளடக்கீயவாறு இவ் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டுஅம்பாறை பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட முகாமையாளர் T.விஜயன் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் க.சதிசேகரன் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உ.அனோஜா கிராம சேவையாளர்களுக்கான நிறுவாக உத்தியோத்தர் திரு.கந்தசாமி சமூர்த்தி தலைமையக முகாயையாளர் திரு.அரசரெட்ணம் அம்மன் மகளிர் அறக்கட்டளையின் பணிப்பாளர் V.வாமதேவன் திட்ட அபிவிருத்தி உத்தியோத்தர் S.ரவீந்திரன் திரூக்கோவில் கலாச்சார மத்திய நிலையப்பொறுப்பாளர் K.ரவீந்திரன் கிராம சேவை உத்தியோத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள் பனை உற்பத்தி சங்கங்கள் RDS உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ஆகியோர் இவ் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.








No comments: