திருக்கோவில் பிரதேசத்தில் உப மின்சார நிலையம் திறந்து வைப்பு


திருக்கோவில்01 பிரதான வீதியில் தற்காலிகமாக இயங்கி வந்த உப மின்சார சபை திருக்கோவில் பிரதேசவாழ்பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கோவில் பிரதே செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களின் ஊடாக திருக்கோவில் 03 மரக்காலை வீதியில் உத்தியோக பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடமானது மின்சார சபையின் கிழக்குமாகாண பிரதிப்பொதுமுகாமையாளர் WLSK.விஜயதுங்க. DGM அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,அம்பாறை பிரதான தலைமை பொறியலாளர் MRM.ப(f)ர்காண் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுபதிகாரி WADP.பத்மகுமார , திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் மற்றும் மின்சார சபை பொறியலாளர்கலான U.மயூரன் ML.ஹரீஸ்மொகமட் உதவிப்பொறியலாளர் MIM.நவ்பல் திருக்கோவில் மின்சார சபை அத்தியட்சகர் A.அசோகதீபன் அத்தியட்சகர் சுலக் ஷன் சட்டத்தரணி யேகசுதன் ஆியோரும் மின்சார சபை உழியர்கள் பொதுமக்கள் RDS உறுப்பினர்கள் கிராம சேவகர்கள் மதகுருமார் நலன் வரும்பிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜே.கே.யதுர்ஷன்-
No comments: