அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தினரால் இலவச மருத்துவ முகாம்
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையால் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம், மற்றும் மூக்கு கண்ணாடி வழங்குதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் என்பன 10 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், தாதிமார்கள் பங்கேற்புடன் அவிசாவளை,வகரத்தனசார மகா வித்யாலயத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்னர்.
இதில் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர் மற்றும் நிர்வாக குழு முக்கிய உறுப்பினர்களும் பங்குகொண்டு இருந்தனர்.
அத்துடன் இச்சங்கத்தினரால் கடந்த வருடமும் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இவ்வாறான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதோடு இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் இவ்வாறான சமூக செயற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஆகியனவும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.
No comments: