கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தின் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பொத்துவில் கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தின் 2020,2021,2022 ஆண்டுகளில் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் திரு.ரி.உதயகுமார் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர் உதயகுமார் மற்றும் பிரதிகல்வி பணிப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பாடசாலை வரலாற்றில் முதன் முறையான 3 ஏ சித்தி பெற்ற மாணவி குமாரலிங்கம் கேசாளினி உள்ளிட்ட சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.























No comments: