சஜித் பிறேமதாசவினால் அக்கரைப்பற்று பகுதிக்கு இதுவரையில் சுமார் 9 மில்லியன் உதவி

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசவினால் நாளை 28ம் திகதி திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா கல்லூரிக்கு சுமார 6 மில்லியன் அளவிலான பேருந்து ஒன்று அன்பளிப்பாக வளங்கப்படவுள்ளது.

நாளையதினம் அம்பாறை பாளிகா மகாவித்தியாலயம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்கு பஸ் வண்டி வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிக் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெ.வினோகாந்த் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச  வைத்தியசாலைக்கு சுவாசம் திட்டத்தின் ஊடகா சுமார் 03 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கடந்த வருடம் ஏப்பல் மாதம் 15ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிலையில் நாளையதினம் இராமகிருஷ்ணா கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக பஸ்வண்டி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments: