மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கோமாரி டிசாந்தினியின் ஓவியம் தெரிவு செய்யப்பட்டது.


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவனமும் இணைந்து நடாத்தும் கிழக்கின் ஓவியத்திருவிழா கடந்த (21) ம் திகதி சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

21, 22, 23 ஆம் திகதிகளில் மூன்று நாட்களாக ஓவியத் திருவிழா கண்காட்சியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் காலை 9.00 மணி முதல் மலை 6.00 மணிவரையுள்ள காலப்பகுதியில் இடம் பெறுகின்றது.

குறித்த ஓவிய திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து அர்த்தம் புரிந்து கொள்ள கூடிய வகையில் பல உயிரோட்டம் உள்ள ஓவியங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அம்பாறை மாவட்டம் கோமாரி பகுதியினை சேர்ந்த ஓவியரான் நடராசா.டிசாந்தினியால் வரையப்பட்ட (கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர், சமூகசேவரகர்) சங்கீதத்துடன் தொடர்புடைய ஓவியம் ஜேர்மனியர்களால் தெரிவு செய்யப்பட்டு விற்பனையாகியது.

டிசாந்தினி குறித்த ஓவிய நிகழ்விற்கா சங்கீதமம் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஓவியங்களை வரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: