துன்புறுத்தல்களை சவாலாக கொண்டு மக்களுக்காக பயணிப்போம் - சிறில்


கிழக்கு மாகாண தலைமை குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் (22) பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவுக்கிளை தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

காரைதீவு காவல் நிலைய பொறுப்பு அதிகாரியினுடைய எழுத்து மூல கடிதத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணம் குற்றத்தடுப்பு உளவு பிரிவின் திருகோணமலை தலைமை காரியாலயத்தில் குறித்த விசாரணை இடம் பெற்றதாக ஜெயசிறில் குறிப்பிட்டார்.

விசாரணையின பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

குற்ற தடுப்பு பிரிவின் கொழும்பு தலைமையகத்தில் இருந்து  என் மீது  குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்பட்டிருப்பதாக புலனாய் உளவுத்துறையினர் தெரிவித்தார்கள்.

இது உண்மைக்கு புறம்பான குற்றங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது  அதற்கான பதிலையும் நான் வழங்கியுள்ளேன்  நாட்டிலே ஜனநாயக ரீதியாக தமிழர்களுடைய "இளைஞர் உரிமைக்காக" குரல் கொடுத்து செயல்படுகின்ற எங்களுடைய செயல்பாட்டை மழுங்கடிப்பதற்காகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி எங்களை ஓரங்கட்டுவதற்காகவும் பல வருட காலமாக விசாரணை நீதிமன்ற வழக்குகள் இடம் பெற்று வந்து கொண்டே இருக்கின்றது.

உண்மையில் எந்தவித பிழையும் செய்யாத நாங்கள் இவ்வாறான பெரிய குற்ற பிரிவுகளினால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றோம் பல குற்றவாளிகள் பதவிகளோடு அரசாங்கத்தின் அதிகாரத்தோடும் இன்று வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பை கொடுத்துவிட்டு குற்றமில்லாத எங்களை குற்றவாளி போன்று துன்புறுத்துவதும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் இந்த அரச செயல்பாடு ஆகும் உண்மையிலேயே ஈஷ்டர் குண்டு தாக்குதலில் கூட பல ஆவணம் இருக்கக்கூடிய பல ஆயுததாரிகள் பல கொலை சம்பவங்களோடு தொடர்புபட்ட விடயங்கள் என்றும் பத்திரிக்கை வாயிலாகவும் பாராளுமன்றத்திலும் பல சாட்சியளிக்கப்பட்டும் அவ்வாறானவர்கள்  வெளியில் வெளியில் சுதந்திரமாக திரிகின்றனர்.

"எவ்விதமான குற்றங்களையும் செய்யாத எங்களுக்கு விசாரணை" செய்வது என்பது நாங்கள் இந்த இலங்கை நாட்டிலே துன்புறுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பதற்கு சமம்.

எங்களுடைய செயல்பாடு என்பது எங்களுடைய மக்களுக்காக தொடர்ச்சியாக செயற்பாடாக இருக்கும் எவ்வித தடைகளும் வந்தாலும்  மக்களுக்காக நாங்கள் பயணிப்பதற்கு இவ்வாறான துன்புறுத்தல்களையும் சவாலாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதோடு எங்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காவிட்டாலும் சர்வதேச நீதிக்காக எங்களுடைய பயணம் தொடரும்

No comments: