திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் வீடுகளுக்கு அடிக்கல நடும் நிகழ்வு இன்று இடம் பெற்றது

ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில்  காயத்திரி கிராம மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக  அடிக்கல் நாட்டும் நிகழ்வு  திருக்கோவில் பிரதேச செயலாளர்  திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின்  தலைமையில்  இன்று (22)  இடம் பெற்றது.

 திருக்கோவில் பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக  Seeders Canada அமைப்பினர் திருக்கோவில் 4  காயத்திரி கிராமத்தில் உள்ள வீடற்ற 25 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட தீர்மானிக்கபட்டிருந்தது .

இதன் முதற்கட்டமாக 5 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் மங்களகரமாக  கடந்த 2023.03.24 அன்று ஆரம்பித்தது வைக்கப்பட்டது.

இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளில்  முதற்கட்டமாக 5 வீடுகள்  2023.07.09 பூரணமாக கட்டிமுடிக்கப்பட்டு மிகவும் சிறப்பானமுறையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 5 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அவ் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  (2023.09.21) திருக்கோவில் ~4 ஶ்ரீ காயத்திரி அம்மன் ஆலய பூசகர்  பிரசாந்த் சர்மா அவர்களின் அருளாசியுடன் ஆரம்பித்தது வைக்கப்பட்டது.

திரு.த.கஜேந்திரன் ,உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன் ,நிதி வழங்குனர் சார்பில் திரு.சசிநந்தன்,திருக்கோவில்(04) கிராம உத்தியோகத்தர் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்மற்றும் பயனாளர்கள்  என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.

வீடுகள் அமைப்பதற்காக பிரதேச செயலகத்தால் காணிகளும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















No comments: