திருக்கோவில் தீர்த்தோற்சவத்தில் அம்பாறை மாவட்ட அரசாங் அதிபர் கலந்து கொண்டார்

 
ஈழ நாட்டின் திருச்செந்தூராம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (16) சிறப்பாக இடம் பெற்றது.

பிதுர் கடன் செய்வதற்கு ஏற்ற இரண்டு அமாவாசைகள் வரும் ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை வியதமிருந்து பிதுர்கடன் செலுத்தும் பிண்டம் கரைக்கும் நிகழ்வுகளும் ஆலய வளாகத்தில் இடம் பெற்றன.

அறுகம்புல் , மஞ்சள், நெய், என்பன சேர்த்து சுமங்கலி பெண்களால் "சுண்ணம்" இடிக்கப்பட்டு மூல மூர்த்தி உட்பட பரிவார மூர்த்திகளுக்கு பூசைகள் இடம் பெற்றது.

இதன் பின்னர் முருகப்பெருமானின் புனித வேலுக்கு ஆலய முன்றலில் அபிசேகம் இடம் பெற்று கடலடக்கம் "கடல் கட்டல்" இடம் பெற்று ஆயிரக்கணக்கான பக்கர்கள் படைசூழ திருக்கோவில் சித்திரவேலுயுத சுவாமிக்கு வங்கக்கடலில் தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.

இதன் போது ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வில்

அம்பாறை மாவட்ட அரசாங் அதிபர் சிந்தக்க அபேவிக்ரம,கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் ,திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் , உப பிரதேச செயலாளர் க.சதிசேகரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை இடம் பெறும் பூங்காவன திருவிழா, நாளை மறுதினம் இடம் பெறும் வைரவர் பூசையுடன் இவ் ஆண்டு உற்சவம் இனிதே நிறைவு பெறும் .














No comments: