அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரிக்கு நீதிபதி MHM ஹம்சா விஜயம்

இன்று அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு காலை 8.30 மணியளவில்  அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கௌரவ ஜனாப் .MHM.ஹம்சா அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்

இன்றைய தினம் நீதிபதியின் பிறந்த தின ஞாபகார்த்தமாக குறித்த விஜயமானது அமைந்திருந்தது.

இதன்போது விலையுயர்ந்த மாமரம் மற்றும் பலாமரம் ஆகிய இரு மரக்கன்றுகளை தொழில்நுட்ப கட்டிடத்தின் முன்னால் நட்டு நீரூற்றினார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் போதை ஒழிப்பு

பொருத்தமாக சீருடை அணிவதன் முக்கியத்துவம்.

பொருத்தமான சிகையலங்காரம்.

ஆசிரியத்துவத்தை மாணவர்கள் மதித்தல் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களை மாணவர்மத்தியில்  உரையாடியிருந்தார்.

அத்துடன் பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகத்திலும் இன்றைய விஜயம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
No comments: