கணவன் - மனைவி வாக்குவாதத்தால் பலியாகிய மாமியார்இன்று (02)வவுனியா - பெரியஉலுக்குளம் பிரதேசத்தில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகிய மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டி.பி.அமராவதி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன், மனைவி மீது தாக்க இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: