யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
யாழில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 23ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன் காரின் பின் பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்து கிடந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை நேற்றைய தினம் (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
23 வயதுடைய நீர்வேலி தெற்கு - நீர்வேலியைச் சேர்ந்த இரத்தினேஸ்வரன் பாவிதான் என பெரிஸார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
No comments: