மாணவிக்கு வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பி ஆசிரியர் செய்த காரியம்11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு நடன ஆசிரியர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த ஆசிரியரை விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவியை தவறு செய்ய தூண்டும் எண்ணத்திலே ஆசிரியர் இவ்வாறு வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிருக்கலாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் படி அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 

No comments: