மேலும் வீழ்ச்சியடைந்துள்ள டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 353.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 333.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


No comments: