பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் சிறுவன் சடலமாக மீட்புஅம்பாறை பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் 11 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்தனர் .

நேற்றையதினம் 06 மதியம் 12 மணிக்கு பின்னர் சிறுவன் காணாமல் போன நிலையில் பொத்துவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை கோமாரி முகத்துவார கிளப்பில் இருந்து குறித்த சிறுவனின் சடலத்தினை பொது மக்கள் மீட்டுள்ளனர் .

உயிரிழந்த சிறுவன் கோமாரி மெதடிஸ்த மகாவித்தியாலயத்தில் தரம் 06ல் கல்வி பயிலும் 11 வயதுடைய சொர்ணலிங்கம் ஜனுஷாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோமாரி களப்பின் முகத்துவாரப் பகுதி இரண்டு வருடங்களின் பின்னர் கடந்த வாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments: