காத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைதுநேற்று (06) இரவு காத்தான்குடி கடற்கரை வீதியில் வியாபாரத்துக்கா மோட்டர் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் படி நேற்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி கடற்கரை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த வியாபரியை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் ஐஸ் போதை பொருளையும் மீட்டனர்.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments: