விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டு பெண்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்னுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது பிரேசிலில் உள்ள பெண் ஒருவரே 1300 அமெரிக்க டொலர்கள் தருவதாக போதைப்பொருள் அடங்கிய பையை இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது .

25 வயதுடைய வெளிநாட்டு பெண் கடந்த 28ஆம் திகதி டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது 4 கிலோ 631 கிராம் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments: