தேர்தலுக்கான புதிய திகதி தொடர்பில் நாளை தீர்மானம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை(03) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுவிற்கு இடையில் நேற்று முன்தினம்(28) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
No comments: