ஒப்பந்த அடிப்படையில் நீதிமன்றுக்கு தீ வைத்த மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28) இது தொடர்பான வழக்கு விசாரணைகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில் இடம்பெற்றது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவி இதனால் நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய அதிகளவிலான ஆவணங்கள் அழிவடைந்திருந்தன.

இது தொடர்பாக 24 வயதான இருவரும் 18 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டு இவர்களிடம் எடுக்கப்பட்ட  விசாரணைகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு தீ வைக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments: