இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி தீ பற்றல்
கிரீஸ் நாட்டில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் புகையிரதம் சென்று கொண்டிருந்தவேளை அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு புகையிரதம் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேருக்கு நேர் மோதியதால் புகையிரதத்தின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: