பேராதனை பொறியியல் பீட மாணவியொருவர் உயிரிழப்பு



பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் (28) குறித்த மாணவி பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது விடுதி அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments: