2 வருடங்களின் பின்னர் அகழ்ந்துவிடப்பட்டகோமாரி களப்பு

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள கோமாரி களப்பு (முகத்துவாரம் ) சுமார் இரண்டு வருடங்ஙளின் பின்னர் நேற்றையதினம் அகழ்ந்து விடப்பட்டுள்ளது.

குறித்த களப்பானது கோமாரி 2 p24 கிராம சேவகர் பகுதியில் அமைந்துள்ளது.

கோமாரி 2,p24 பகுதியில் சுமார் 473 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

செல்வபுரம் , கோமாரி ஆகிய இரண்டு கிராமங்களை குறித்த பகுதி உள்ளடங்கியுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் இப் பிரதேசமும் முக்கியத்துவம் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்களின் பின்னர் வெட்டப்பட்ட முகத்துவாரம் பகுதியினை பிரதேச மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.


No comments: