எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்! நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்


எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.
 
இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முடங்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: