ஒஸ்கார் விருதை தட்டித் தூக்கியது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு" பாடல்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், 95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்´ படத்தின் ´நாட்டு நாட்டு´ பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.


*ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ´நாட்டு நாட்டு´ பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.

* சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது.

*சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது.

*சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது.

*சிறந்த ஆவணப்படத்துக்கான ஒஸ்கார் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.

*சிறந்த ஒப்பனைக்கான ஒஸ்கார் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஒஸ்கார் விருதை பெற்றனர்.

*சிறந்த ஒளிப்பதிவுக்கான ஒஸ்கார் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.

*An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஒஸ்கார் விருதை பெற்றுக் கொண்டனர்.

*சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஒஸ்கார் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

*சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஒஸ்கார் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

*சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.

*சிறந்த பின்னணி இசைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஆஸ்கர் விருதை பெற்றார்.

*ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஒஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.

*|சிறந்த Visual Effects பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது ´அவதார் தி வே ஆஃப் வாட்டர்´ படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஒஸ்கார் விருதினை பெற்றுக் கொண்டனர்.








No comments: