கெல்சி டெவலப்மென்ட் PLC நிறுவனத்தின் தலைவராக எஸ். துமிலன்

கெல்சி டெவலப்மென்ட் PLC நிறுவனத்தின் தலைவராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் எஸ். துமிலன்

இலங்கையில் 41 வருடங்கள் பழமை வாய்ந்ததும், பங்கு சந்தையின் பிரதான அங்கத்தவருமான  கெல்சி டெவலப்மென்ட் PLC நிறுவனத்தின் தலைவராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் சிவராஜா துமிலன் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.  

இவர் ஜனவரி 25 ஆம் திகதி முதல் தலைவராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கெல்சி டெவலப்மென்ட் PLC நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

சிவராஜா துமிலன் Chartered, CIMA, ACCA , CPA(Aus) உள்ளிட்ட பல மேற்பட்டங்களில் தேர்ச்சிபெற்றுள்ளார்.

அதேநேரம் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் Blue ocean group of companies இன் சேவைகளை விஸ்த்தரித்து, வர்த்தக துறையில் கட்டட கலையின் மூலம் பல வடிவங்களை அறிமுகப்படுத்தி இலங்கைக்குள் அந்நிய செலாவணியை Blue வocean group of companies  மூலம் அதிகளவில் கொண்டு வந்தார்.

அத்துடன் இவரின் வெற்றிப்பயணத்தில் Link  Engineering நிறுவனம் அளப்பெரிய சேவைகளையும் ஆற்றி வருகிறது.  இந் நிறுவனம் சுமார் 41 வருடங்களுக்கும் மேலாக அரச மற்றும் தனியார் துறை கட்டடங்களை அமைத்து சாதனைபடைத்துள்ளது. அத்துடன் Link  Engineering நிறுவனமானது Blue ocean group of companies  இன் ஒரு முக்கிய அங்கத்துவ உறுப்பினர் என்பது  குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் Blue ocean group of companies , Blue ocean Residencies, கெல்சி நிறுவனம்,  மற்றும் Link  Engineering ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்திருப்பதால் கட்டுமானம் மற்றும் தொடர்மாடி வீடுமனை அமைப்பதில் சாதனைமிக்க, வலுவான நம்பிக்கையையுடைய நிறுவனங்களாக இவை வெற்றிநடை போடுகின்றன.

இதனால் உலகலாவிய ரீதியில் எஸ். துமிலன் வெற்றிகரமான சிறந்த வர்த்தகராக போற்றப்பட்டு வருகிறார்.



No comments: