அரசியல்வாதிகள் மக்களை தேடி செல்ல வேண்டும் - திருக்கோவிலில் சஜித்

டீல் போடும் ஒப்பந்தங்கள் செய்யும் மக்கள் பிரதிநிதி வேண்டுமானால் வேறு கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்றையதினம் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த சஜித் 

திருடும்,இலஞ்சம் வாங்கும் உறுப்பினரை உருவாக்க வேண்டும் என்றால் வேறு கட்சிக்கு வாக்களியுங்கள் எனவும்,கிராமத்தை கட்டியெழுப்ப மக்கள் சார் பிரதிநிதி ஒருவரை உருவாக்க வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளில் நடமாடும் சேவைகளை நிறுவுவதன் மூலம் அரசியல்வாதிகளை தேடி மக்கள் வரும் நிலைமைக்குப் பதிலாக அரசியல்வாதியே மக்களைத் தேடிச் செல்லும் நிலையை உருவாக்குவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவாகுவது இதுவே முதல் முறை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அவர்களில் எவருக்கும் ஒப்பந்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(SJB Media Unit)No comments: