நபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

 



கொக்காவில பிரதேசத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் வீட்டினுள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது மகன் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தின் பிரேதப் பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக் காயம் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
அதன்படி, இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.




No comments: