ரயில் கடவையை கடக்க முயன்ற பெண்ணொருவர் மரணித்துள்ளார்இன்று (18) காலை 06.00 மணியளவில் வாத்துவ ரயில் நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் ரயில் பாதையைக் கடந்த பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மகா வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே தனது கடமைகளுக்காக கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் ஏறுவதற்காக இந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பாதையை கடப்பதற்காக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பான ரயில் பாலத்தை கடக்காமல் ரயில் பாதையை கடக்கும் போது விபத்து இடம்பெற்றுள்ளது.


No comments: