க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான அறிவிப்பு


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் செயற்பாடு 2023 பெப்ரவரி 1 முதல் 28 பெப்ரவரி 2023 வரை இணைய முறையில் மட்டுமே நடத்தப்படுகிறது.

எனவே விண்ணப்பங்களை உரிய திகதிகளில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவுக்குப் பின் Online சேவை  நிறுத்தப்படும் என்றும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் பெறும் திகதியில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டது.No comments: