மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
நாட்டில் மருந்து தட்டுப்பாடு காரணமாக மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் செயற்பாடாகும் என சமர்ப்பிக்கப்பட்ட மனுவை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை செய்யவுள்ளது
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது
மனுவில் சுகாதார செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆகிய பெயர்கள் காணப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நாட்டின் பொது சுகாதார சேவை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக கூறியள்ளார்.
No comments: