போதையில் ஏற்பட்ட முரண்பாடு - நபரொருவர் கொலை

மது அருந்திக் கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பொல்கஹவெல-ஹெவனகல பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடஹேன, பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்யப்பட்டுள்ளதுடன் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: