கர்ப்பிணியின் வயிற்றில் உதைத்த கடற்படை சிப்பாய் கைது



பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளாகிய பெண் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த கர்ப்பிணியின் கரு கலைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விசாரணையின் போது சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் கடற்படை சிப்பாய்க்கும் இடையில் ஏற்பட்ட முரண்பட்டால் சந்தேக நபரான கடற்படை சிப்பாய் தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். உதைத்த பின்னர் கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.



No comments: