முன் பகையால் கொலை செய்யப்பட்ட நபர்அங்குலான மொரட்டு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் நேற்றைய தினம் (19) தனது மாமா வசிக்கும் இரத்மலானையில் உள்ள வீட்டிற்கு சென்ற போதே கொலை செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போதுமுன் பகையால் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலை செய்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அங்குலான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments: