கதிர்காமம் பகுதியில் விபத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பகுதியில் நேற்று (08) மாலை இடம் பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செல்லக் கதிர்காமத்தில் இருந்து கிரிவெஹெர நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பெண்ணொருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த வீதியால் சென்ற பெண்  மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், பின்னால் அமர்ந்து சென்ற நபர் ஆகியோர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில, குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



No comments: