கினிகத்தேனையில் தாய், மகள் இருவரின் சடலங்கள் மீட்பு

கினிகத்தேனை பிரதேசத்தில் வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல நாட்களாக வீட்டில் வசித்தவர்கள் வெளியே வராத நிலையில் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கினிகத்தேனை பொலிஸார் இன்று (09) வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது படுக்கையறையில்  தாய் மற்றும்ஸமகளின் உடல்களையும் பொலிஸார் கண்டெடுத்தனர்.

உயிரிழந்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 50 வயதுடைய மஹமதிலகே பிரதீபா இந்திராணி என்ற பெண்ணும் 30 வயதுடைய அவரது மகளும் இவ்வாறான உயிரிழந்துள்ளனர்.
No comments: