அதிசொகுசு பிராடோ ரக ஜீப்பில் இருந்த நபர் மீது துப்பாக்கி பிரியோகம்இன்று காலை 8.00 மணியளவில் பாணந்துறை - பின்வத்தை பிரதேசத்தில் அதிசொகுசு பிராடோ ரக ஜீப் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமான மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments: