மட்டக்களப்பை சேர்ந்த திருடன் அக்கரைப்பற்றில் கைது.

(கனகராசா சரவணன்)

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய  ஒருவரை  நேற்று திங்கட்கிழமை இரவு (27) அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 54 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த கொள்ளையனை அக்கரைப்பற்று பகுதியில் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபர் மட்ட கல்லடி வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கிளி நொச்சி உட்பட பல இடங்களில் திருமணம் முடித்தள்ளதாகவும் மட்டக்களப்பில் இரு கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்ததுடன் ஏறாவூரில், காத்தான்குடி, வாழைச்சேனை அம்பாறை ஆலையடிவேம்பு, கிளிநொச்சி, பொலிஸ் பிரிவுகளில் 20 வீடுகளுக்கு மேல் உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் நீண்டகாலமாக தலைமறைவாகிவந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவரை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.No comments: