நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீரில் மூழ்கி நபரொருவர் பலி


நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நண்பனுடன் நீராடச் சென்ற சென்ற
இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

18 வயதுடைய நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் இடத்தைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற நபரே  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீராடச் சென்ற இளைஞன் திடீரென கால்வாயில் மூழ்கி காணாமல் போயுள்ளார், இளைஞனைக் காணாததால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்  சுமார் 10 அடி ஆழத்தில்  கால்வாயில்  இருந்து அதிகாரிகள்  இளைஞரின் சடலத்தை மீட்டனர்.

சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேலதிக முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: