தம்பிலுவில் வங்கி பாதுகாவலர் ஒருவர் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலைதிருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்தில் வங்கியில் பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

58 வயதுடைய தம்பிலுவில் வீ.சி வீதியைச் சோந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகமணி கணேசமூர்த்தி என்பவரே இன்று அதிகாலை அவரது அறையை திறந்துபொது அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

நீதிமன்ற உத்தரவை பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

இது தொடர்பான திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: