துருக்கியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மணற்சிற்பம்

 துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கங்களால், ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்த உலக நாடுகள் மீட்புப் படைகளை அனுப்பியுள்ளன.

துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் துருக்கியில் 12 ஆயிரத்து 873 பேரும். சிரியாவில் 3 ஆயிரத்து 162 பேரும் உயிரிழந்துள்ளதோடு, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அதில் "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற கைகோருங்கள்" (Join hands to save the earthquake victims") என்ற செய்தியுடன் ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளுடன் ஒரு சிறுவனின் உடல் இருப்பதாக சித்தரித்துள்ளார்.

இந்த மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் புகைபடத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

No comments: