அட்டாளைச்சேனையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இராகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸ் பரிசோதகர் பகிதரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு சென்று நபரொருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 35 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தகே நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை (09) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: