தொழிற்சங்க நடவடிக்கைக்குதயாராகும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்
உப பொது முகாமையாளர் (வணிக) பதவிக்கு தகுதியற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் அதிகாரியை பிரதிப் பொது முகாமையாளராக நியமித்தால், அந்தத் தருணத்தில் இருந்து தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என புகையிதத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
No comments: