என்னை கொலை செய்ய முயற்சித்தனர் - வசந்த முதலிக்கே

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 167 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே நேற்று முன்தினம்  பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலையில் இருந்த தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றிருந்மை குறிப்பிடத்தக்கது 

தற்போதைய  அரசாங்கத்திற்கு தம்மை கொலை செய்யும் நோக்கமே இருந்தாகவும் விஜய வீர மற்றும் விஜேய குமாரதுங்க ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைமையே தமக்கும் ஏற்படும் என காவல்துறை அதிகாரியொருவர் தம்மை எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார்.

 நீதிக்கு புறம்பாக தடுத்துவைத்திருந்ததாகவும் மறைவான இடத்திற்கு தம்மை கொண்டு சென்று பின்னர் அவசரமாக அவ்விடத்தில் இருந்து அகற்றகயதாகவும் தெரிவித்தார்.



No comments: