வவுனியாவில் இறந்த ஆணின் உடற்பாகங்கள் மீட்பு

 


வவுனியா ஈரற்பெரியகுளம் பிரதேசத்தில் நேற்று (13) இறந்த ஆண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரற்பெரியகுளம் புதிய நகர் காட்டுப்பகுதியிலே இவ் உடல் பாகங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஈரற்பெரியகுளத்தில் வசித்து வந்த 43 வயதுடைய 2 குழந்தைகளின் அப்பாவான ஜிந்தக்க ராஜபக்ஷ கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்‌.

இந்நிலையில் குறித்த மனித உடற்பாகங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இது காணமால் போனவரின் உடலாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது சம்பந்தமான விசாரணைகளை   பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: