வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 9 மி.மீ தோட்டாக்களுடன் ஒருவர் கைது

களுத்துறை வடக்கில் வசிக்கும் 30 வயதுடைய நபர் சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மகசீன் மற்றும் 09 மி.மீ தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்தை பார்வையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அங்கு 187 மதன மோதக மாத்திரைகளும் கிடைக்கபெற்றதாகவும் பெரிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


No comments: