கெரடிகல மலையேற முயன்று வழி தவறிய 33 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.உடுதும்பர பகுதியில் கெரடிகல மலையில் ஏறும் போது கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மலையேறச் சென்று வழி தவறிய  33 இளைஞர்கள்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கியிருந்த 31 இளைஞர்கள் மற்றும் இரண்டு யுவதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டி, ஹோமாகம, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments: